அவளை பற்றிய
என் நினைவுகள்
வாசம் வீசும்
அவளை பற்றிய
என் கவிதைகள்
என்னிடம் பேசும்.....
அவள் நடந்து
செல்லும்போது
மரங்களெல்லாம்
கொஞ்சம்
இளைப்பாறிவிட்டு செல்
என அழைக்கும்....
அவள் இருப்பதால்
அவள் இருக்கும்
அந்த தெரு
அழகாகவே தோன்றும்....
அவள் வீட்டு
கண்ணாடிக்கு கூட
வெட்கப்பட தெரியும்....
அவள் வீட்டு
தோட்டத்தில் உள்ள
பூக்கள்
அவள் கூந்தல்
ஏறிய பிறகே
மரிப்பதர்காக
காத்து கிடக்கும்....
அவளது படுக்கை
அறையில்கூட
பங்குபெறும் அவளது
செல்ல நாய்க்குட்டி
அவள் வருகைக்காகவே
வாசலில்
காத்துக்கிடக்கும்....
அவளது கை
வளையல்கள் கூட
அவள்
கட்டளைக்கு கட்டுப்பட்டு
மௌனம் சாதிக்கும்....
அவள்
படுத்துறங்கும் கட்டில்
அவளை
தழுவி அணைத்து
தாய் பாசத்தை
ஊட்டும்.....
அவள் உடுத்தும்
ஆடைகளுக்கு
கோபப்பட தெரியும்.....
அவளது
கால் செருப்பிற்கு
அவளை தாங்குகிறோம்
என்ற
இறுமாப்பு உண்டு....
அவளது
நெற்றி பொட்டு
சிலரது
உள்நோக்கத்தை
உணரும்
வல்லமை வாய்ந்தது.....
அவளது தெருவில்
இளைஞ்சர்களின்
நடமாட்டம்
அதிகமாகவே இருக்கும்....
அவள் வீட்டில்
உள்ள
எல்லா பொருட்களுக்கும்
உயிர் உண்டு
அவள் இருப்பதனால்.....
அவள் ஒரு வசந்தம்
அவள் ஒரு வானவில்
அவள் ஒரு கவிதை
அவள் ஒரு காவியம்
அவள் ஒரு பூந்தளிர்
அவள் ஒரு சிற்பம்
அவள் ஒரு கோலமயில்
அவள் ஒரு கோடைமழை
அவள் ஒரு பூந்தென்றல்
அவள் ஒரு மேகம்.....
அவள் மௌனம் அழகானது
அவள் வெட்கம் சுகமானது
அவள் பார்வை தூய்மையானது
அவள் வார்த்தைகள் உண்மையானது
அவள் பெண்மையின் இலக்கணம்
அவள் பெண்ணினத்தின் இலக்கியம்
அவள் சிரிப்பு துயரங்களை
போக்கும் மருந்து.....
அவள்
சித்தன்னாவும்
ரவிவர்மனும்
சேர்ந்து தீட்டிய
ஓவியம் -இப்படி
எப்படி சொன்னாலும்
அதற்க்கு அவள்
முழு தகுதி
உடையவளே.....
அவளை பற்றி
எழுத தொடங்கினால்
முடிப்பதற்கு
சிரமம்தான்.....
அவளை பற்றிய
என் நினைவுகள்
வாசம் வீசும்
அவளை பற்றிய
என் கவிதைகள்
என்னிடம் பேசும்....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக